தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார். இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதில் உரையாற்றிய அமைச்சர் மெரினா கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்கு நிரந்தர நடை பாதை அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
மாற்றுத் திறனாளிகள் கடற்கரையில் கடலுக்கு அருகில் செல்வதற்கு ஏதுவாக ஒரு கோடி மதிப்பீட்டில் நிரந்தர நடை பாதை அமைக்கப்படும். தூய்மை பணியாளர்களுக்கு வங்கிக் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு தெரிவித்தார். மேலும், சென்னை வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் வாகன நெரிசலை குறைப்பதற்காக 98 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும் என அவர் கூறினார்.