Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியை தூக்கிய கொரோனா…. இதுவரை இல்லாத அதிர்ச்சி….!!

கடந்த நான்கு மாதங்களாக தமிழகமே உச்சரிக்கும் ஒரு பெயர் கொரோனா. இதன் கூடாரமாக விளங்கிய சென்னை தற்போது அதிலிருந்து மீண்டு வருகிறது. ஆனால் பிற மாவட்டங்களில் அதன் தாக்கம் தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும்,  உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. கொரோனா பாதிப்பு மக்களை துயரத்துக்கு தள்ளி இருந்தாலும், கணிசமான எண்ணிக்கையில் பலரும் குணமடைந்து வீடு திரும்பி வருவது நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது.

இந்நிலையில் இன்று இதுவரை இல்லாத உச்சமாக தூத்துக்குடியில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது மக்களை நடுங்க வைத்துள்ளது. புதிதாக 361 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், மொத்த பாதிப்பு 4004ஆக உயர்ந்துள்ளது. 2077பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 1541ஆக உள்ளது. அதே போல 25 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

Categories

Tech |