தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட 450 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து லாரி டிரைவரை கைது செய்தனர்.
தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு படகுகள் மூலம் அடிக்கடி கஞ்சா, மஞ்சள், பீடி இலை உள்ளிட்ட பொருட்களானது கடத்தும் சம்பவங்கள் நடந்து வருகின்ற நிலையில் இதை தடுக்கும் வகையில் கடற்கரை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தாளமுத்து நகர் அருகே உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது.
இதையடுத்து போலீசார் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட பொழுது அவ்வழியாக சென்ற லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மூட்டை மூட்டையாக மொத்தம் 450 கிலோ கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடித்ததை தொடர்ந்து போலீசார் லாரியையும் கஞ்சாவையும் பறிமுதல் செய்தார்கள். பின்னர் லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தியதில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆவரங்காடு திருப்பாச்சேத்தி பகுதியில் வசித்து வருவதும் அவர் படகுமூலம் இலங்கைக்கு கஞ்சாவை கடத்த திட்டமிட்டு இருந்ததும் தெரிந்தது. இதனால் போலீசார் அவரை கைது செய்தார்கள்.