Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த 3 பேர்…. திடீரென பள்ளத்தில் இறங்கிய வாகனம்…. நீலகிரியில் பரபரப்பு…!!

சரக்கு வாகனம் பள்ளத்தில் இறங்கிய விபத்தில் 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டனர்.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனியில் இருந்து மாம்பழ லோடு ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனம் ஒன்று நீலகிரி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த வாகனத்தில் ஓட்டுநர் உட்பட 3 பேர் இருந்துள்ளனர். இந்நிலையில் குன்னூர்- ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநர் உள்பட மூன்று பேருக்கும் தூக்கம் வந்தது. இதனால் அவர்கள் சாலையோரமாக வாகனத்தை நிறுத்தி விட்டு தூங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக வாகனம் பின்னோக்கி நகர்ந்து சாலையோர பள்ளத்தில் இறங்கிவிட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக வாகனம் கவிழாமல் இருந்ததால் 3 பேரும் காயமின்றி உயிர் தப்பினர். இதுகுறித்து அறிந்த குன்னூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு வாகனத்தின் உதவியோடு சரக்கு வாகனத்தை மீட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |