Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த தாய்-மகன்…. மர்ம நபர்களின் கொடூர செயல்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

தாய்-மகன் இருவரும் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குறுக்களையன்பட்டியில் சௌந்தரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தாய் மகன் இருவரும் தோட்டத்தில் வேலை முடித்துவிட்டு இரவு நேரத்தில் தூங்கி கொண்டிருந்தனர். அதிகாலையில் செல்வத்தின் மனைவி தொலைபேசி மூலம் தனது கணவரை அழைத்துள்ளார். அப்போது சுவிட்ச் ஆப் என வந்ததால் தோட்டத்து வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அங்கு தாய், மகன் இருவரும் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பெண் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இரண்டு பேரின் சடலங்களையும் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தாய், மகன் இருவரையும் கொடூரமாக வெட்டிக் கொலை செய்த மர்ம கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |