Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த தம்பதியினர்…. வீட்டில் நடந்த சம்பவம்…. போலீஸ் வலைவீச்சு…!!

கார் ஓட்டுநரின் வீட்டில் மர்ம நபர்கள் தங்க நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஊரணி பகுதியில் கார் டிரைவரான குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆதிலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தம்பதிகள் இருவரும் காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கியுள்ளனர். அப்போது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 11 பவுன் தங்க நகைகளை திருடி விட்டு தப்பி ஓடினர்.

இதனையடுத்து காலையில் எழுந்து பார்த்த குமார் தங்க நகை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |