வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அய்யம்பேட்டை கிராமத்தில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நெசவுத் தொழில் செய்து வருகிறார். இவர் வசிக்கும் மாடி வீட்டின் மேற்கூரை சிமெண்ட் பூச்சு பெயர்ந்த நிலையில் இருந்துள்ளது. நேற்று முன்தினம் லோகநாதன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தூங்கி கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக சிமெண்ட் பூச்சி பெயர்ந்து லோகநாதனின் 10 வயதுடைய மகன் நேதாஜி மீது விழுந்தது. இதனால் படுகாயமடைந்த சிறுவனை குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.