Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தூக்க மாத்திரையை கூட விட்டு வைக்காத நபர் …போலீஸ் வலைவீச்சு …!!

பிளேடை காட்டி மிரட்டி தூக்க மாத்திரைகளை திருடிச் சென்ற நபரை காவல்துறையினர்  தேடி வருகின்றனர்.

சென்னை நொளம்பூரில் 18-வது தெருவில்  மருந்து கடை ஒன்று உள்ளது .உடலில் பல  வெட்டுக் காயங்களுடன் மர்ம நபர் ஒருவர் மருந்து கடைக்குள் புகுந்தார். அங்கிருந்த ஊழியர்களிடம்  தூக்க மாத்திரை தருமாறு அந்த நபர் கேட்டுள்ளார்.மாத்திரை வேண்டும் என்றால் மருத்துவரின் சீட்டு வேண்டும் என மருந்து கடை ஊழியர்கள் கூறியுள்ளனர் .

இதனால் கோபமடைந்த  நபர், தான் கையில் மறைத்து  வைத்திருந்த பிளேடை காட்டி மிரட்டி, கடையில் இருந்த தூக்க மாத்திரையை அவரே தேடி எடுத்து சென்றுள்ளார் . இந்த காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது .இதன் அடிப்படையில் போலீசார் அந்த நபரை தேடி வருகின்றனர் .

Categories

Tech |