Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

தூக்கி மூஞ்சில அடிப்பாங்க..! பயத்தில் திமுக அரசு… 234தொகுதியில் வெல்ல போகும் அதிமுக …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழ் நாட்டு மக்களுக்கு குப்பை கொடுத்தார்கள். உணவுத்துறை அமைச்சர் சக்ரபாணி, வேற எதாவது பொருட்கள் சரியாக இல்லையா திரும்பவும் வாங்கிக்கொள்ளுங்கள் என சொல்கிறார். திமுக தலைவர் முதலமைச்சர் மு க ஸ்டாலின் உடனே சொல்கிறார்…  யார் தவறு செய்தாலும் நாங்கள் நடவடிக்கை எடுப்பேன் என சொல்கிறார். தவறு செய்தது நீங்கள் தான்.

பிறகு யார் தவறு செய்ய முடியும் ?  எதிர்க்கட்சியாக தவறு செய்ய முடியும் அதில்…. இது எப்படி இருக்குன்னா… ஊர்ல இவன் திருடனாக இருப்பான். அடுத்தவனை சொல்லுவான் திருடன் திருடன் திருடன் திருடன் என்று…  அந்த மாதிரி கதையாகத்தான் இருக்கிறது. இது எல்லாம் வெடிக்கும். எங்க கிராம சபையில்…..  விடமாட்டார்கள் பயந்துகொண்டு கூட்டவில்லை, இதான் உண்மை. கூட்ட வேண்டிய தானே கிராமசபையை…

அறிவாலயத்தில் பூச்சி முருகன் இல்ல கல்யாணத்துக்கு 500, 1000 பேர் வச்சு கூட்ட முடியுது.  கிராமத்திலிருந்து ஒரு நூறு பேரு வச்சியே கிராம சபை கூட்ட முடியாதா ? ஏன் கிராம சபை கூட்டம் கூட்டல் ? பொங்கல் பரிசு எல்லாம் தூக்கி மூஞ்சில அடிப்பாங்க, வீசுவார்கள். புரட்சித்தலைவர் பற்றி தேர்தல் முன்னாடி ஸ்டாலின் எங்க பெரியப்பா,  எங்க பெரியப்பா என்று பேசினாரே…

அந்த பெரியப்பாவை மதித்து இருந்தால் அவருடைய பிறந்த நாளில் அரசு சார்பில் வரவேற்பு கொடுக்கிறார்கள். யார் யார் புகழை சொல்லுவது ? உங்க தலைவரே எங்க தலைவர்தான் தெரிந்தார். எங்க தலைவர் இல்லைனா  உங்க தலைவரே கிடையாது. இன்னைக்கு கூட சட்டமன்ற தேர்தல் பொதுத்தேர்தல் வந்தால், அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மகத்தான வெற்றியை 234 தொகுதியிலும் பெறும் என தெரிவித்தார்.

Categories

Tech |