Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தூக்கில் தொங்கிய நர்சிங் மாணவி…. பின்னணி என்ன?…. போலீஸ் தீவிர விசாரணை…..!!!!

சென்னை திருவேற்காடு அடுத்த மாதிராவேடு பகுதியில் பெண்களுக்கான நர்சிங் கல்லூரியானது விடுதியுடன் செயல்பட்டு வருகிறது. 100க்கும் அதிகமான மாணவிகள் படிக்கும் இங்கு மேல்தளத்தில் விடுதியும், கீழ் தளத்தில் கல்லூரியும் இருக்கிறது. இக்கல்லூரியில் ஈரோட்டை சேர்ந்த சுமதி (19) என்ற மாணவி 2ம் ஆண்டு நர்சிங் படிப்பு பயின்று வந்தார். இவர் நேற்று காலை வகுப்புக்கு சென்றுவிட்டு மதியம் உணவு சாப்பிடுவதற்காக தன் தோழிகளுடன் விடுதிக்கு வந்தார். அப்போது தோழிகளை சாப்பிட செல்லுமாறு கூறிவிட்டு தன் அறைக்குள் இருந்தார். இதையடுத்து மாலையில் நீண்ட நேரம் ஆகியும் சுமதி அறையிலிருந்து வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது தோழிகள், அறைக்கு சென்று பார்த்தனர்.

எனினும் அறை கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காததால் சந்தேகமடைந்த தோழிகள் ஜன்னல் வழியே பார்த்தபோது சுமதி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே சகமாணவிகள் ஜன்னல் வழியாக அறைக்குள் சென்று சுமதியை மீட்டனர். ஆனால் அதற்குள் சுமதி இறந்துவிட்டார். இது தொடர்பாக கல்லூரி நிர்வாகத்துக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் சுமதி உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக சுமதியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது பெற்றோர் சென்னையிலுள்ள உறவினர் வீட்டில் இருந்ததால் அவர்களும் சம்பவம் நடந்த கல்லூரிக்கு உடனே வந்தனர்.

அதனை தொடர்ந்து தங்கள் மகள் இறந்ததை கண்டித்து அவர்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சி செய்தனர். அப்போது அவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். அத்துடன் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையில் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் செல்போனை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து கடிதம் ஏதாவது எழுதிவைத்துள்ளாரா..? எனவும் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இது பற்றி சுமதியின் பெற்றோர் மற்றும் விடுதியிலுள்ள சகமாணவிகளிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |