குடும்பத்தகராறில் மனமுடைந்த பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் ஜோடர்பாளையத்தை அடுத்துள்ள கொத்தமங்கலத்தில் வெல்லம் தயாரிக்கும் ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மோகன்(25) மற்றும் அவரது மனைவி ராஜகுமாரி(22) ஆகியோர் தங்கி வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி கருத்துவேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து சம்பவத்தன்று இரவு மோகன் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றபோது அவரது மனைவி ராஜகுமார் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். இதனைபார்த்த மோகன் உடனடியாக ராஜகுமாரியை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி ராஜகுமாரி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து ஜோடர்பாளையம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்த நிலையில் திருச்செங்கோடு உதவி கலெக்டர் இளவரசி மற்றும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.