Categories
மாவட்ட செய்திகள்

துளிர் அறிவியல் வினாடி வினா போட்டி… வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள்…!!!!!

காளையார் கோவில் ஒன்றிய அளவிலான தொழில் ஜந்தர் மந்தர் அறிவியல் வினாடி வினா போட்டி காளையர் கோவில் மாவட்ட ஆட்சியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்றுள்ளது. இதில் தமிழ்நாடு அறிவியல் இயக்க காளையர் கோவில் கிளை தலைவர் வீரபாண்டி தலைமை தாங்கியுள்ளார். மேலும் வட்டார கல்வி அலுவலர் சகாய செல்வன் ரோட்டரி சங்க தலைவர் பாண்டி கண்ணு முன்னிலை வகித்துள்ளார் தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை மாவட்ட செயலாளர் ஆரோக்கியசாமி நோக்க உரையாற்றியுள்ளார்.

இதனை அடுத்து தமிழ் வழியிலும், ஆங்கில வழியிலும், இளநிலை, உயர்நிலை, முதுநிலை என்ற மூன்று பிரிவுகளில் நடைபெற்ற வினாடி வினா போட்டியை மாவட்ட ஆட்சியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் ஆனந்தி தொடங்கி வைத்துள்ளார். காளையர் கோவில் ஒன்றியத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலை மேல்நிலை பள்ளிகளும் கலந்து கொண்டுள்ளது. இதனை தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு புத்தகங்களையும் சான்றிதழ்களையும் பரிசாக வழங்கியுள்ளனர்.

Categories

Tech |