துல்கர் சல்மான் நடிக்கும் குருப் படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.
துல்கர் சல்மானின் முதல் படத்தை இயக்கிய ஸ்ரீநாத் ராஜேந்திரன் இந்த படத்தை இயக்கியுள்ளார். 35 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் இந்த படம் உருவாகியுள்ளது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே ரசிகர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்தது. ஏனெனில் துல்கர் சல்மானின் கோர்ட் மற்றும் கூலிங் கிளாஸ் அணிந்து மிகவும் ஸ்டைலான தோற்றத்தில் காட்சியளித்தார்.
இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளிலும் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் துல்கர் சல்மான் மிரட்டியுள்ளார். இதனால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.