இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்திருக்கின்ற படம் சீதாராமன். இந்த படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடித்திருக்கின்றார். மேலும் ராஷ்மிகா மந்தானா, சுமந்த் என பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஸ்வப்னா சினிமா தயாரித்திருக்கின்ற இந்த படத்தை வை ஜெயந்தி மூவிஸ் வெளியிடுகின்றது. விஷால் சந்திரசேகர் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
தமிழ் தெலுங்கு மலையாளம் மொழிகளில் உருவாக இருக்கின்ற இந்த படம் ஆகஸ்ட் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த சூழலில் இந்த படத்தின் நான்காவது பாடல் வெளியாகியிருக்கிறது. கபில் கபிலன் மற்றும் சின்மயி ஸ்ரீ படா பாடியுள்ள இந்த பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.