துலாம் ராசி அன்பர்களே..! இன்று தடைகளும் தாமதங்களும் கொஞ்சம் அதிகரிக்கும். சேமிப்புகள் கூட கொஞ்சம் கரையலாம். கொடுக்கல்-வாங்கலில் கூடுதல் கவனம் அவசியம். குடும்பத்தினரை அனுசரித்து செல்வது ரொம்ப நல்லது. இன்று வேலை பளு கொஞ்சம் கூடும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நாளாகவே இருக்கும். இதுவரை வராமல் இருந்த தடைபட்ட பணத் தொகை கைக்கு வந்து சேரும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகளும் உங்களுக்கு அதன்மூலம் மேன்மைகள் உண்டாகும்.
உடன் இருக்கும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பும், மகிழ்ச்சியை கொடுக்கும். கூடுமானவரை உடல்நிலையில் மட்டும் கொஞ்சம் கவனமாகவே இருங்கள். வெளியூர் பயணத்தின் பொழுது புதிய நபரிடம் எந்தவித வாக்குவாதங்களும் செய்யாமல் செல்வது ரொம்ப நல்லது. இன்று பணம் கொஞ்சம் பற்றாக்குறையுடன் இருந்தாலும் மனம் அமைதியாகவே இருக்கும். மாணவச் செல்வங்களுக்கு இன்று பொன்னான நாளாக அமையும். கல்வியில் நல்ல தரதேர்ச்சியும் நல்ல மதிப்பெண்களையும் அவர்கள் பெறக்கூடும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வ செழிப்புடன் இருக்கலாம்.
அதிர்ஷ்ட திசை:-தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் பச்சை நிறம்