கிணற்றை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தபிளா பகுதியில் நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். அதே பகுதியில் அமைந்துள்ள கிணற்றில் இருந்து தங்களது அன்றாட தேவைக்காக தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக கிணற்றில் மரங்களில் இருந்து இலைகள் மற்றும் தூசுகள் விழுந்து தண்ணீர் மாசுபட்டு துர்நாற்றம் வீசுகிறது.
அந்த நீரை பயன்படுத்தினால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் தாங்கள் பக்கத்து கிராமங்களில் இருந்து குடிநீர் எடுத்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் கிணற்றை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.