மேற்கு வங்காளத்தில் துர்கா பூஜைகாக அமைக்கப்படகுள்ள மின் விளக்குகளால் விமானத்தை இயக்குவதில் பாதிப்பு ஏற்படுவதாக விமானிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
மேற்கு வங்கத்தி தற்போது துர்கா பூஜை தொடங்கி விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதற்காக பொது இடங்களில் மிகப்பெரிய அளவிலான பந்தல்கள் தயார் செய்து அதன்மீது துர்காதேவி சிலை வைத்து வழிபாடு செய்வார்கள். இந்த பந்தல் சுற்றிலும் மின் விளக்குகளால்
அலங்கரிக்கப்பட்டிருக்கும்.
மேற்கு வங்க மாநிலம் தெற்கு தும்தும் பகுதியில் ஸ்ரீபூமி துர்கா பூஜா பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பந்தல் பிரமாண்ட விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இத்தகைய ஜொலிக்கும் மின் விளக்குகளால் விமானத்தை இயக்குவதில் பாதிப்பு ஏற்படுவதாக மூன்று விமானத்தின் கேப்டன்கள் புகார் அளித்துள்ளனர். கொல்கத்தா விமான நிலைய அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை மேற்கொண்டார்களா என்பது பற்றி எந்தவித தகவல்களும் வெளியிடப்படவில்லை.