துர்கா பூஜைக்கு செல்லலாம் என்று அழைத்து சென்று மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
அசாம் மாநிலத்தில் இருக்கும் கோல்பாரா மாவட்டத்தில் மிக விமர்சையாக நவராத்திரி விழா நடைபெற்றது. இந்த விழாவை பொதுமக்கள் மாணவ-மாணவிகள் என அனைவரும் சேர்ந்து பார்த்து ரசித்தனர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த மூன்று இளைஞர்கள் தங்களுடன் படிக்கும் மாணவிகளை துர்கா பூஜை பார்க்கலாம் என்று காரில் அழைத்துச் சென்றனர். மாணவிகள் நம்பிச் சென்ற போது பூஜை நடக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லாமல் அவர்கள் பள்ளி மைதானம் ஒன்றிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
பின்பு அங்கு வைத்து மூன்று பேரும் மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்தனர். பிறகு அவர்களை அவர்களது வீட்டிலேயே இறக்கி விட்டுள்ளனர். இதுகுறித்து மாணவிகள் பெற்றோரிடம் தெரிவிக்க காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வழக்கு பதிந்த காவல்துறையினர் மூன்று இளைஞர்களையும் கைது செய்து அவர்களது வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இச்சம்பவத்தை அவர்கள் செல்போனில் காணொளியாக பதிவு செய்ததாக மாணவிகள் கூறியதால் அது தொடர்பாகவும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.