Categories
அரசியல்

“துர்காவதி என்னும் சிம்ம சொப்பனம்”… பலரால் அறியப்படாத… சில சுவாரசிய தகவல்கள் இதோ….!!!!!!!!

உத்தரபிரதேசத்தில் உள்ள அலகாபாத் மாவட்டத்தில் 1907 ஆம் வருடம் ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்தவர் துர்க்காதேவி. இவரது தந்தை கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரியாக பணிபுரிந்தார் துர்கா தேவியின் தாத்தாவும் பிரிட்டிஷ் அரசியல் காவல் அதிகாரியாக பணிபுரிந்தார். தந்தையும் தாத்தாவும் ஆங்கிலேயர்களுக்கு விசுவாசமாக இருந்தாலும் அவர்களது வழி தோன்றலான துர்காவதி அப்படி இருக்கவில்லை சிறுவயதிலிருந்தே விடுதலை தாகம் உள்ளவராக வளர்ந்தார். இவரது 11 வயதில் செல்வ செழிப்பு மிக்க குடும்பத்தை சேர்ந்த பக்வதி சரண் வோக்ரா   என்னும் 15 வயது இளைஞனுடன் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் பிரிட்டிஷ் காவல் அதிகாரி ஜான் சாண்டர்ஸ் என்பவரை கொன்ற பின் 1928 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 17ஆம் நாள் பகத்சிங்குக்கும் தேவராஜ் குரு போன்றோரும்  துர்காவதியின் வீட்டிற்கு சென்றனர். நடந்ததை அறிந்து கொண்ட துர்காவதி பகத்சிங்கை கல்கத்தாவிற்கு செல்லுமாறு ஆலோசனை வழங்கியுள்ளார். இதன்படி பகத்சிங் ரயிலில் கல்கத்தாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். கூடவே அவரின் மனைவி வேடத்தில் துர்காவதியும் அந்த ரயிலில் பயணம் மேற்கொண்டுள்ளார் மற்றொரு சுதந்திர போராட்ட வீரர்களான ராஜ் குரு இவரது சேவகனாக பயணப்பட்டார்.

இதில் வியப்பான செய்தி என்னவென்றால் இவர்கள் பயணித்த அதே ரயில் சுமார் 500 காவலர்களும் பயணம் மேற்கொண்டுள்ளனர். இத்தனை பேரின் கண்ணிலும் மண்ணைத் தூவி விட்டு பகத்சிங்கை கல்கத்தாவிற்கு பத்திரமாக கொண்டு சேர்த்த துர்காவதியின் நெஞ்சுரம் வார்த்தைகளால்  விவரிக்க இயலாது. கல்கத்தாவை அடைந்த பகத்சிங் அங்கு கங்குலி, ஜி என் தாஸ், பிணிந்தர் கோஷ் ஆகிய தனது வங்காளதேச சகாக்களை துர்காவதிவுடன் சென்று சந்தித்துள்ளார். அந்த சந்திப்பின்போது வெடிகுண்டு தயாரிக்கும் பயிற்சியும் வழங்கப்பட்டது பகத்சிங் உள்ளிட்ட தனது சகாக்களுடன் சேர்ந்து துர்காவதியும் வெடிகுண்டுகள் தயாரிக்கும் பயிற்சியை பெற்றுள்ளார்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக பகத்சிங், ராஜ் குரு, சுக்தேவ் போன்ற மூவருக்கும் ஆங்கிலேய அரசு தூக்குத்தண்டனை விதித்ததும் அதிர்ச்சி அடைந்த துர்காவதி தன்னிடமிருந்த நகைகள் அனைத்தையும் 3000 ரூபாய்க்கு விற்று அந்த பணத்தின் உதவியோடு அவர்களை தூக்கு தண்டனையிலிருந்து வெளியே கொண்டு வர முயற்சி செய்துள்ளார். விடுதலைப் போராட்ட மற்ற வீரர்களை சந்தித்து உதவி கேட்டும் மன்றாடியுள்ளார். ஆனால் இவை எதற்கும் செவி சாய்க்காது ஆங்கில அரசு அவர்கள் மூவரையும் தூக்கிலிட்டது இந்த சம்பவத்தின் ஊடே   மற்றொரு வேதனையான சம்பவம் நடைபெற்றுள்ளது.

அதாவது தூக்கு தண்டனை பற்றி பகத்சிங் சிறையில் இருந்தபோது சிறைச்சாலையில் குண்டு வீசி பகத்சிங் தப்பிக்க வைக்கும் முயற்சியில் துர்காவதியின் கணவர் பக்வதி வோக்ரா இறங்கியுள்ளார். அதற்காக மாதிரி வெடிகுண்டை தயாரித்து அதை லாகூர் நகருக்கு அருகில் இருந்த ராவி நதிக்கரையில்  வைத்து சோதித்து பார்த்த போது ஏற்பட்ட விபத்தில் அவர் உயிரிழந்தார். இது துர்கா பாபிக்கு பேரிழப்பு என்றாலும் அவர் கலங்கவில்லை. ஆங்கிலேயரின் மஞ்சத்தால் வீழ்ந்த தனது சகாக்களுக்கும் வீரர்களை காப்பாற்றுவதற்கான தனது இன்னுயிரும் இழந்த கணவருக்காகவும் இன்னும் தீவிரமாக சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார்.

அதிலும் குறிப்பாக பகத்சிங் மற்றும் சகாக்களை தூக்கில் போட காரணமாக இருந்த பஞ்சாபின் முன்னாள் கவர்னரான லார்ட் ஹெய்லி என்பவரை பலிவாங்க துடித்துள்ளார் துர்காவதி. இந்த முயற்சியில் இவர் இறங்கிய போது அந்த கவர்னர் தப்பிவிட கவர்னரின் உதவியாளர்கள் துர்காவதியின் தாக்குதல் காயமடைந்துள்ளனர். இதற்காக கைது செய்யப்பட்ட துர்காவிற்கு மூன்று வருடங்கள் சிறை தண்டனையும் கிடைத்தது. இவ்வாறு இந்திய விடுதலை சுதந்திர போராட்டத்திற்காக தனது ஒட்டுமொத்த வாழ்க்கையை அர்ப்பணித்த துர்காவதி இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு உத்தர பிரதேசத்தின் காசியாபாத் நகரில் ஒரு சாதாரண பிரஜை  போல இயல்பான வாழ்க்கை வாழ்ந்துள்ளார்.

Categories

Tech |