Categories
சினிமா தமிழ் சினிமா

துருவ நட்சத்திரம் படம் விரைவில் வெளியீடு… இயக்குனர் அறிவிப்பு…!!!

கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், ரித்து வர்மா, சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன் மற்றும் பலர் நடிக்கும் திரைப்படம் துருவ நட்சத்திரம். இந்த படத்தின் படப்பிடிப்பு 2016ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இருப்பினும் பல காரணங்களால் இந்தப் படம் தாமதமாகி வருகிறது. மேலும் 2017ஆம் ஆண்டு இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.

துருவ நட்சத்திரம் படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி நீண்ட நாள் ஆன நிலையில் படம் இன்னும் வெளியாகவில்லை என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இந்நிலையில் போஸ்டர் புரொடக்ஷன்ஸ் பணிகள் இன்னும் 10 நாட்கள் மீதம் இருப்பதாகவும், திட்டமிட்டபடி படத்தை முடித்து இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிடுவோம் என இப்படத்தின் இயக்குனர் கௌதம் மேனன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |