கிணற்றில் தவறி விழுந்த புள்ளி மானை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள சோளிகவுண்டனூர் வனப்பகுதியில் இருந்து புள்ளிமான் ஒன்று வெளியே வந்தது. இதனை பார்த்ததும் தெரு நாய்கள் புள்ளிமானை விரட்டி சென்றுள்ளது. அப்போது தெரு நாய்களிடம் இருந்து தப்பிப்பதற்காக ஓடிய புள்ளி மான் செந்தில் குமார் என்பவரது விவசாய கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தது.
இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 50 அடி ஆழ கிணற்றில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த புள்ளிமானை உயிருடன் மீட்டனர். அதன் பிறகு அந்த புள்ளி மான் அருகில் இருக்கும் வனப்பகுதியில் விடப்பட்டது.