Categories
தேனி மாவட்ட செய்திகள்

துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த நபர்…. கைது செய்த வனத்துறையினர்…. அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்….!!

வனப்பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த நபரை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள பெரியாற்றுகோம்பை வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக துப்பாக்கி சுடும் சத்தம் கேட்பதாக அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் வனப்பகுதியில் ஒருநபர் துப்பாக்கியுடன் சுற்றி திரிவதை பார்த்த வனத்துறையினர் அவரை பிடித்து விசாரித்ததில் அவர் கரட்டுபட்டியை சேர்ந்த ராஜபாண்டி என்பது தெரியவந்துள்ளது.

மேலும் அவர் விலங்குகளை வேட்டையாட வந்தது தெரிய வந்த நிலையில் வனத்துறையினர் அவரை கைது செய்த ஜீவா நகரில் உள்ள வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதனையடுத்து ராஜபாண்டி துப்பாக்கி வைத்துகொள்ள உரிமம் வைத்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கிடையே ராஜபண்டி கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கரட்டுபட்டி கிராம மக்கள் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனைதொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை கலைந்து செல்லும்படி கூறி உள்ளனர். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |