Categories
சென்னை மாவட்ட செய்திகள்

துபாயில் இருந்து ரூ. 1 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்தல்…. சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு….!!!

விமான நிலையத்தில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் மீனம்பாக்கம் விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து ஒரு விமானம் வந்து இறங்கியது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த பொன்னுசாமி என்பவர் வந்திருந்தார். இவரை சந்தேகத்தின் பேரில் விமான நிலையத்தில் இருந்த அதிகாரிகள் விசாரணை செய்தனர். அந்த விசாரணையின் போது பொன்னுசாமி முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் அவருடைய உடைமைகளை சோதனை செய்தனர். அவருடைய உடைமைகளில் ஏதும் இல்லாத பட்சத்தில், அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர்.

அப்போது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்தது தெரிய வந்தது. அதில் 1 கிலோ 250 கிராம் தங்கம் இருந்தது. இதன் மொத்த மதிப்பு 55 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் ஆகும். இதேபோன்று துபாய் விமானத்திலிருந்து இறங்கிய சென்னையைச் சேர்ந்த தமீம் அப்துல் ரகுமான் மற்றும் திருச்சியை சேர்ந்த முகமது ஹபிபுல்லா ஆகியோரிடமும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த சோதனையின் போது மின்னணு பொருட்கள், குங்குமப்பூ மற்றும் வெளிநாட்டு சிகெரட்கள் போன்றவைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மொத்த மதிப்பு 18 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் ஆகும்.

இதனையடுத்து 2 பேரையும் தனி அறைக்குள் அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்ததும் தெரிய வந்தது. அதில் 1 கிலோ 452 கிராம் தங்கம் இருந்தது. இதன் மொத்த மதிப்பு 62 லட்சத்து 81 ஆயிரம் ரூபாய் ஆகும். மேலும் 3 பேரிடமும் 1 கோடியே 37 லட்சத்து 16,000 ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் 3 பேரையும் கைது செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |