தமிழ் சினிமாவின் இசை ஜாம்பவானாக இருக்கும் ஏ ஆர் ரகுமான் ஏழு வருடங்களுக்குப் பிறகு 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28ஆம் தேதி இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார். இந்த இசை நிகழ்ச்சி குறித்த தகவலை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க ஏற்பாட்டாளரான முகமது யூசுப் வித்தியாசமாக முடிவு செய்தார்.அதன்படி நிகழ்ச்சியும் நடத்துவதோடு மட்டுமல்லாமல் அதனை விளம்பரமாக மட்டுமே பார்க்காமல் அது சாதனை புத்தகத்திலும் இடம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பத்தாயிரம் அடி உயரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பாரசூட்டில் இருந்து குதித்து அறிவிப்பை வெளியிட முடிவு செய்தார்.
இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குழுவினர் ஹெலிகாப்டரின் பறந்து 10 ஆயிரம் அடி உயரத்திலிருந்து நிகழ்ச்சி குறித்த விளம்பரம் மலேசிய கொடி உள்ளிட்டவைகளுடன் குதிப்பதற்காக பயிற்சி எடுத்தனர்.உயிரை பணயம் வைத்து நடைபெற்ற இந்த பிரமோஷன் நிகழ்ச்சியில் பாராசூட் மூலமாக திட்டமிட்ட இடத்தில் குழுவினர் வந்து இறங்கினர்.இவர்களின் இந்த சாதனை அந்த நாட்டின் மலேசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் அதிக உயரத்திலிருந்து குதிக்கப்பட்ட சாதனையாக இடம் பிடித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இப்படி விளம்பரப்படுத்துவது மலேசியாவில் இனிதே முதல் முறை எனவும் கூறப்படுகிறது.