Categories
தேசிய செய்திகள்

அடப்பாவி..! “கொஞ்சம் பொறுங்க வாரேன்” மனைவி சொன்னதால்…. கோபத்தில் கணவன் செய்த கொடூரம்…!!!

மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த தம்பதிகள் ராஜ்குமார் பாஹே (வயது 50)-புஷ்பா பாய் ( வயது 45) . ராஜ்குமார் வனத்துறையின் தினக்கூலி ஊழியராக பணியாற்றி வருகிறார் . இந்த தம்பதிகளுக்கு 23 வயது ஒரு மகள் இருக்கிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று சனிக்கிழமை வேலை முடித்து வந்த ராஜ்குமார் குளித்து விட்டு வந்து மனைவியிடம் துண்டு கேட்டு உள்ளார். அப்போது புஷபா பாய் பாத்திரம் கழுவிக்கொண்டு இருந்த்தால், ராஜ்குமாரை சிறிது நேரம் காத்திருக்குமாறு கூறி உள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ராஜ்குமார் அருகில் கிடந்த மண் வெட்டியை எடுத்து மனைவியின் தலையில் சரமாரியாக தாக்கி உள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் புஷ்பா பாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது குறித்து குடும்பத்தார் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமார் பாஹேவை கைதுச் செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |