அஜித் வலிமை படத்திற்கு பின் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் துணிவு என்னும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். ஹைதராபாத், விசாகப்பட்டினம், சென்னை என பல்வேறு இடங்களில் இந்த படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதில் மஞ்சு வாரியார், சமுத்திரகனி, ஜி எம் சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில் தற்போது துணிவு படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகி இருக்கிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி உள்ள இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Categories
“துணிவு படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியீடு”… ரசிகர்களை கவரும் அஜித் பட குழு…!!!!!
