புதுக்கோட்டை மாவட்டத்தில் வீட்டிலுள்ள சிம்னி விளக்கு மேலே விழுந்து தீப்பற்றியதில் கணவன் – மனைவி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கறம்பக்குடி பகுதியில் சம்கதின் மற்றும் ரெஜினா பேகம் என்ற கணவன்- மனைவி வசித்து வந்தார்கள். இத்தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தை மற்றும் 1ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குடும்பத்துடன் வீட்டில் இரவு தூங்கிக் கொண்டிருக்கும் போது மின்தடை ஏற்பட்டதால் வீட்டிலுள்ள ஜன்னலில் சிம்னி விளக்கு ஏற்றி வைத்து துங்கி கொண்டிருந்தனர். அப்போது காற்று வீசியதில் ஜன்னலில் பற்ற வைத்திருந்த சிம்னி விளக்கு ரெஜினா மீது விழுந்ததால் சேலையில் தீப்பற்றி உடல் முழுவதிலும் தீ பரவியுள்ளது.
இதனால் வலியால் கதறிய மனைவியை காப்பாற்ற முயன்ற போது கணவர் சம்கதின் மீதும் தீப்பற்றி இருவரும் வலியால் கதறியுள்ளனர். இதனைப் பார்த்த குழந்தைகள் அலறியவாறு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்துள்ளனர். குழந்தைகள் அலறிய சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் கணவன் மனைவி இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் கணவன், மனைவி இருவரும் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.