இருசக்கர வாகனத்தை திருடிய 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு அருகே இளையாங்கன்னி கூட்ரோடு பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையிலான காவலர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை மறித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் அரசம்பட்டை பகுதியைச் சேர்ந்த பிரதாப் மற்றும் ராபின் என்பது தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் பல இடங்களில் இருசக்கர வாகனங்களை கொள்ளையடித்ததும் தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் ராபின் மற்றும் பிரதாப் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 7 இருசக்கர வாகனங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.