மோட்டார் சைக்கிளை திருடிய குற்றத்திற்காக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி- திருச்சி மெயின் ரோட்டில் இருக்கும் எலைட் டாஸ்மாக் கடை அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் விழுப்புரம் சாலாமேடு பகுதியை சேர்ந்த சதீஷ்(20) மற்றும் சிபிசெல்வன்(18) என்பது தெரியவந்தது.
இவர்கள் 2 பேரும் இணைந்து விக்கிரவாண்டி பகுதியை சேர்ந்த நவீன் என்பவரது மோட்டார் சைக்கிளை திருடியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து இரண்டு வாலிபர்களையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த மோட்டார் சைக்கிளை மீட்டனர்.