கஞ்சா விற்பனை செய்த 3 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அருளம்பாடி பகுதியில் திருக்கோவிலூர் போலீஸ் சூப்பிரண்டு பழனி தலைமையில் ஒரு குழு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது பாபு என்பவரின் வீட்டில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின்படி காவல்துறையினர் பாபுவின் வீட்டில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூபாய் 15 லட்சம் ஆகும். இதுதொடர்பாக காவல்துறையினர் பாபு மற்றும் அவரது மருமகன்கள் அஜித்குமார், வல்லரசு ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.