Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. மது பாட்டில்கள் மற்றும் புகையிலை பறிமுதல்…. 3 பேர் கைது…. போலீஸ் அதிரடி….!!!

சட்ட  விரோதமாக புகையிலை மற்றும் மது விற்பனை செய்த 3 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் அருகே வடசேரி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மது விற்பனை செய்துகொண்டிருந்த ஜேசுபால் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து 4 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேப்போன்று ஆறாட்டுவிளை பகுதியில் இருக்கும் ஒரு கடையில் காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்துள்ளது. அதை பறிமுதல் செய்த காவல்துறையினர் கடை உரிமையாளர் தங்கசுயம்பு என்பவரையும் கைது செய்தனர். இதனையடுத்து கம்பளம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஏசுராஜ் என்பவரை புகையிலை விற்பனை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |