Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக கஞ்சா கடத்தி வந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள குட்டம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை காவல்துறையினர் சந்தேகத்தின் பெயரில் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் திருச்செந்தூரை சேர்ந்த பிரசாந்த் மற்றும் சக்தி என்பது தெரியவந்துள்ளது. இருவரும் இணைந்து சட்டவிரோதமாக கஞ்சாவை கடத்தி வந்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் பிரசாந்த் மற்றும் சக்தி ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த கஞ்சா பொட்டலங்களையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |