Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. சோதனையில் சிக்கிய பொருள்…. போலீஸ் அதிரடி….!!

காவல்துறையினரால் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி பகுதியில் இருக்கும் முப்பந்தல் இசக்கி அம்மன் கோவிலில் உணவு கடத்தல் தடுப்பு காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.  அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக ஒரு லாரி நின்று கொண்டிருந்தது. அந்த லாரியை காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர்.

அப்போது 200-க்கும் மேற்பட்ட மூட்டைகள்  லாரியில் இருந்துள்ளது. உடனே காவல்துறையினர் அந்த மூட்டைகளை பிரித்து பார்த்து உள்ளனர். அதில் ரேஷன் அரிசி இருந்துள்ளது. அதன் மொத்த மதிப்பு 13 டன் இருக்கும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆனால் லாரியின் ஓட்டுநர்  என்பது தெரியவில்லை. மேலும் இந்த அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அந்த அரிசியை பறிமுதல் செய்து லாரி ஓட்டுநரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |