Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. சோதனையில் சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

மணல் கடத்திய இரண்டு நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கறம்பக்குடியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தென்னகரில் உள்ள கொடிமரம் அருகே சென்று கொண்டிருந்த இரண்டு சரக்கு வேன்களை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அதன் பின் ஓட்டுனரிடம் விசாரணை நடத்தியபோது காட்டாற்றில் இருந்து மணல் கடத்தப்பட்டது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.

இதனையடுத்து காவல்துறையினர் அந்த சரக்கு வேனை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மணிமுத்து மற்றும் வினோத் ஆகிய இரண்டு பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |