சட்ட விரோதமாக கஞ்சா மற்றும் மது விற்பனை செய்த 29 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஹரிஹரன் பிரசாத் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் கஞ்சா மற்றும் மது விற்பனையை தடுக்க தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக 5 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் 2 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து மது விற்பனை செய்த குற்றத்திற்காக 24 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து 100-க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து புகையிலை விற்பனை செய்த குற்றத்திற்காக 22 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு லாட்டரி டிக்கெட் விற்பனை செய்த 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாததால் 22 பேர் மீது பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.