சட்ட விரோதமாக கஞ்சா மற்றும் மது விற்பனை செய்த நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சண்முகம் மற்றும் இளங்கோ தலைமையிலான ஒரு குழு சேஷசமுத்திரம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்தப் பகுதியில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின்படி சாராயம் விற்பனை செய்த வேல்முருகன், அலமேலு என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 30 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த தீர்த்தமலை என்பவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.