Categories
மாநில செய்திகள்

தீவிர புயலாக உருவெடுத்த நிவர் புயல்… நெருங்குகிறது ஆபத்து… பொதுமக்களுக்கு எச்சரிக்கை

வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் இன்று இரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் உருவான நிவர் புயல் தீவிர புயலாக உருவெடுத்து உள்ளது. இதனையடுத்து இன்று பிற்பகல் அதி தீவிர புயலாக மாறி, மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது புயல் கடலூருக்கு கிழக்கே 300 கிமீ தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கில் 310 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கில் 370 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

அதனால் புயல் கரையை கடக்கும்போது 130 கிமீ வரை பலத்த காற்று வீசும். அதேசமயம் 140 கிமீ வரையும் காற்றின் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. புயல் தற்போது மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. அதனால் புயல் காரணமாக நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், திருவாரூர், காஞ்சிபுரம், சென்னை மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |