தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வனத்துறையினர் புலியை பிடித்து விட்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிங்காரம், மசினகுடி பகுதிக்கு உட்பட்ட பகுதியில் 30-க்கும் மேற்பட்ட மாடுகளை அடித்துக் கொன்று விட்டது. ஐகோர்ட் உத்தரவின் படி புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மசினகுடி பகுதியில் சுற்றித்திரிந்த புலிக்கு வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி உள்ளனர்.
ஆனாலும் தப்பியோடிய புலியை வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு பிடித்து விட்டனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது புலியின் உடலில் சில காயங்கள் இருக்கிறது. இதனையடுத்து மருத்துவ பரிசோதனைக்கு பிறகு பிடிப்பட்ட புலி வண்டலூர் பூங்காவில் விடப்படலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.