நாளை மறுநாள் பிரதமர் மோடி காஷ்மீருக்கு செல்ல உள்ளார். இந்நிலையில் இருவேறு பகுதிகளில் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் இருவர் வீரமரணம் அடைந்தனர். காலை பணிக்காக சென்ற ராணுவ பேருந்து மீது அதிகாலை நாலரை மணி அளவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். துணை ராணுவ படையினர் நடத்திய பதில் தாக்குதலில் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். அதில் துணை ராணுவப் படையைச் சேர்ந்த உதவி துணை ஆய்வாளர் ஒருவர் வீர மரணம் அடைந்தார்.
மேலும் இரு வீரர்கள் காயமடைந்தனர். மேலும் மற்றொரு சம்பவத்தில் ராணுவ முகாம் அருகே அதிகாலை பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் சோதனை நடத்தியபோது ஒரு கட்டத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் பாதுகாப்பு படை வீரர் வீரமரணம் அடைந்தார். இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.