Categories
தேசிய செய்திகள்

“தீவிரவாதம் வேரறுக்கப்படும் வரை நாம் ஓயக்கூடாது”… பிரதமர் மோடி பேச்சு…!!!!!

டெல்லியில் தீவிரவாதத்திற்கு நிதி இல்லை எனும் தலைப்பில் மாநாடு நடைபெற்றுள்ளது.

டெல்லியில் 3-வது அமைச்சர்கள் மாநாடு இன்று மற்றும் நாளை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தொடக்க நாளான இன்றைய நிகழ்வில் பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார். தீவிரவாதத்திற்கு நிதி இல்லை எனும் தலைப்பில் இந்த மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கூறியதாவது, தீவிரவாத தாக்குதல் எங்கு நடந்தாலும் அது  கண்டனத்திற்குரியது தான். தீவிரவாதம் நடந்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும். இந்தியாவில் பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு பெயர்களில்,  பல்வேறு வகைகளில் தீவிரவாதம் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த உலகம் தீவிரவாதத்தின் கோர முகத்தை உணர்வதற்கு முன்பாகவே இந்தியா அதன் தாக்கத்தை வெகு காலத்திற்கு முன்னதாக சந்தித்து விட்டது.

ஆயிரக்கணக்கான உயிர்களை நாம் தீவிரவாதத்திற்கு இழந்திருக்கின்றோம். இருந்த போதிலும் நாம் துணிச்சலுடன் தீவிரவாதத்தை எதிர்த்து போராடி இருக்கிறோம்.  தாக்குதலில் ஒரு உயிரிழந்தாலும் அது தீவிரவாதம் தான். எனவே தீவிரவாதம் என்பது வேரருக்கப்படும் வரை நாம் ஓயக்கூடாது. தீவிரவாதத்தில் நீண்ட கால தாக்கம் ஏழை மக்கள் மீது பெருமளவில் பிரதிபலிப்பதால் அந்தப் பகுதி வாழ் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. தீவிரவாதத்திற்கு நிதி உதவி செய்யும் வேரை கண்டறிந்து ஒழிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |