சேலம் மாநகராட்சியில் கடந்த சில வாரங்களாக நல்ல மழை பெய்தது. அப்போது பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை மேற்கொண்டுள்ளனர். தற்போது மழை முற்றிலும் குறைந்திருக்கிறது இதனால் விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் மழை நீர் வடிகால்கள் அமைத்தல், ஏற்கனவே இருக்கும் கால்வாய்களில் தூர்வாரல், ஓடைகளை சீரமைத்தல் போன்றவை ஆகும். அந்த வகையில் சேலம் மாநகராட்சி மேயர் உத்தரவின் கீழ் அதிகாரிகள் தீவிர களப்பணியாற்றி வருகின்றார்கள். கடந்த 10.9.2022 முதல் தற்போது வரை நகரின் 33 இடங்களில் 20 கிலோமீட்டர் தூரத்திற்கு ஓடைகள் மழை நீர் கால்வாய்களில் தூர்வாரும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதன் மூலமாக 480 லோடு கழிவு மண் இதுவரை அப்புறப்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும் ஓடைகள் தூர்வாரும் பணி களிமண் அப்புறப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என மாநகராட்சி சார்பில் கூறப்பட்டிருக்கிறது. இந்த பணிக்காக 40க்கும் மேற்பட்ட லாரிகள், ஜேசிபி மற்றும் ஹிட்டாச்சி இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை மாநகராட்சி மேயர் ஆர் ராமச்சந்திரன் மாநகராட்சி ஆணையாளர் தா கிறிஸ்துராஜ் போன்றோர் நேரில் பார்வையிட்ட ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்போது அஸ்தம்பட்டி மண்டல குழு தலைவர் சே.உமாராணி மாநகர பொறியாளர் ஜி ரவி மாநகர நல அலுவலர் யோகானந்த் கல்வி குழு தலைவர் ஆர் பி முருகன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர். வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக தூர் வாரும் பணிகள் அனைத்தும் முடிவிற்கு வந்துவிடும் என கூறப்பட்டுள்ளது.