Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தீவிரமாகி வரும் 2-வது அலை… இதை கட்டாயம் போட்டுக்கோங்க… மீறினால் அபராதம்..!!

கொரோனா 2-வது அலை தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருவதால் பொதுமக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா 2-வது அலை தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக முக கவசம் பொதுமக்கள் கட்டாயம் அணிந்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் முக கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்படுகிறது. இந்நிலையில் சுகாதார ஆய்வாளர் மணி குழுவினர் லப்பைக்குடிகாடு பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ் கிருஷ்ணன் தலைமையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள லப்பைகுடிகாடு பேருந்து நிலையம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், கடைவீதி ஆகிய பகுதிகளில் முக கவசம் அணியாமல் சென்ற 12 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனர். மேலும் அவர்களுக்கு முக கவசத்தின் முக்கியத்துவம் குறித்தும் விளக்கினார்.

Categories

Tech |