ஆஸ்துமா நோயினால் அவதிப்பட்ட பெண் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள தாத்தப்பன்குளம் பகுதியில் அன்வர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி மொபினா(40) பல ஆண்டுகளாக ஆஸ்துமா நோயினால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்கு பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை என கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த மொபினா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கம்பம் வடக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.