Categories
தேசிய செய்திகள்

தீப்பிடித்த வீட்டுக்குள் புகுந்து…. துணிச்சலுடன் குழந்தையை மீட்ட போலீஸ்காரர்…. குவியும் பாராட்டு….!!!!

தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த வீட்டுக்குள் புகுந்து குழந்தையை துணிச்சலுடன் காப்பாற்றி வந்த காவல் துறையினருக்கு அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலம் கரவ்லி பகுதியில் கடந்த 3ஆம் தேதி கலவரம் மற்றும் வன்முறை நடந்தது. அப்போது கடைகள் மற்றும் வீடுகளுக்கு தீவைக்கப்பட்டது. அதில் ஒரு வீடு தீப்பிடித்து எரிந்தது. வீட்டின் உள்ளே சிக்கிய 4 வயது குழந்தை மற்றும் அவரது தாயார் மேலும் 2 பெண்கள் உதவி கேட்டு கதறினார்.

அந்தத் தாயின் மடியில் குழந்தை இருந்தது. குழந்தை தீயில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ஒரு துணியால் குழந்தையை தாய் சுற்றினார். அப்போது அங்கு வந்த காவல்துறையினர் ஒருவர் தீயில் சிக்கிய படி போர்வையால் பொருத்தப்பட்டிருந்த குழந்தையை வாங்கிக் கொண்டு வெளியே ஓடி வந்தார். பின்னர் கதறிய குழந்தையின் தாய் மற்றும் மேலும் 2 பெண்களை அவர் தீயில் இருந்து காப்பாற்றினார். தீயில் சிக்கிய குழந்தையை மீட்டு வந்த காவல்துறையினருக்கு அனைவரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |