நச்சலூர் பகுதியில் சமைக்கும் போது தீடிரென தீப்பற்றியதால் குடிசை எரிந்து சாம்பலான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
கரூர் மாவட்டத்திலுள்ள நச்சலூர் பகுதியில் இருக்கும் ரத்தினபுரி காலனியில் ராதிகா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் வீட்டில் நேற்று முன்தினம் மாலை சமையல் செய்து கொண்டிருக்கும் போது திடிரென குடிசையில் தீப்பற்றியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும் தீ வேகமாக குடிசை முழுவதும் பரவி எரிந்து சாம்பலானது.
இதில் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, துணிகள் மற்றும் பாத்திரம் உள்பட அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலானது . மேலும் இது பற்றி கிராம நிர்வாக அலுவலருக்கு மக்கள் தகவல் தெரிவித்தனர். இதனால் சம்பவ இடத்திற்கு வந்த நிர்வாக அலுவலர் குணசேகரன் வீட்டை பார்வையிட்டு மேலும் ராதிகாவிற்கு அரிசி ,பருப்பு, மற்றும் பணம் ஆகியவற்றை இலவசமாக வழங்கினார். மேலும் ராதிகாவிற்கு ஆறுதல் கூறி வாடகை வீடு ஒன்றை ஏற்பாடு செய்து கொடுத்தார்.