Categories
மாநில செய்திகள்

தீபாவளி ஸ்பெஷல்….. சென்னையில் இருந்து நெல்லை, ராமேஸ்வரம், திருச்சிக்கு சிறப்பு ரயில் எப்போது தெரியுமா?…. இதோ முழு விவரம்….!!!!

தீபாவளி பண்டிகை முன்னிட்டு பயணிகள் நெரிசலை கருத்தில் கொண்டு பல்வேறு முக்கிய வழித்தடங்கள் சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரிய உத்தரவிட்டுள்ளது. அதன்படி தெற்கு ரயில்வே சார்பில் சென்னை சென்ட்ரலில் இருந்து ராமேஸ்வரத்துக்கும்,‌ தாம்பரத்திலிருந்து திருநெல்வேலி மற்றும் திருச்சிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. திருச்சியில் இருந்து நாளை மதியம் 2.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் இரவு 7 மணிக்கு தாம்பரம் வந்தடையும். தாம்பரத்திலிருந்து வருகின்ற 27ஆம் தேதி இரவு 9:40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் அதிகாலை 2.50 மணிக்கு திருச்சியை சென்றடையும்.

அதனைப் போல தாம்பரத்தில் இருந்து நாளை இரவு 10.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 9 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். திருநெல்வேலியில் இருந்து வருகின்ற 26ம் தேதி மாலை 5.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இதனையடுத்து சென்று சென்னை சென்ட்ரலில் இருந்து வருகின்ற 23 ஆம் தேதி இரவு 8.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 11 மணிக்கு இராமேஸ்வரம் செல்லும். ராமேஸ்வரத்தில் இருந்து வருகின்ற 24ஆம் தேதி மாலை 4:20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 6:20 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Categories

Tech |