Categories
சினிமா தமிழ் சினிமா

தீபாவளி வெளியீடு… “காலத்தால் அழியாத திரைப்படங்கள்”…. இதோ ஒரு பார்வை…!!!!!

தீபாவளியில் வெளியாகி மக்களின் வரவேற்பை பெற்று காலத்தால் அழியாத திரைப்படங்கள் ஒரு பார்வை.

தீபாவளி அன்று வெளியாகி நம்மை கவர்ந்து திரும்பி பார்க்க வைத்த சில திரைப்படங்களை இங்கு பார்க்கலாம். 1944 ஆம் வருடம் தீபாவளிக்கு வெளியான திரைப்படம் ஹரிதாஸ். இப்படத்தில் இடம்பெற்ற மன்மத லீலை வென்றார் உண்டோ என்ற பாடல் காலத்தை வென்ற பாடலாகும். இத்திரைப்படம் சென்னையில் உள்ள பிராட்வே திரையரங்கில் 110 வாரங்கள் ஓடி சாதனை படைத்தது. 1952 ஆம் வருடம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான திரைப்படம் பராசக்தி. இத்திரைப்படம் வெளியாகி 70 வருடங்கள் ஆகி இருந்தாலும் படத்தில் பேசப்பட்ட வசனங்கள் இன்றும் பேசப்படுகின்றது. தீபாவளியன்று வெளியான இத்திரைப்படம் புரட்சிகரமான வசனத்திற்காகவே மிகப்பெரிய வெற்றி பெற்றது.

1954 ஆம் வருடம் ரத்தக்கண்ணீர் திரைப்படம் வெளியானது. நடிகர் எம்.ஆர்.ராதா நடிப்பில்  வெளியான இப்படம் திரையுலகிலும் நாடக உலகிலும் தனக்கென தனி இடத்தை பிடித்தது. இத்திரைப்படத்தில் தொழு நோயால் பாதிக்கப்பட்டு துன்பப்படும் நிலையிலும் மோகன் என்ற கதாபாத்திரம் நாட்டு நடப்புகள் குறித்து நையாண்டி செய்யும் குணம் படத்தில் தனிச்சிறப்பாகும். இன்றைய ரசிகர்களும் இத்திரைப்படத்தை இன்று அளவும் ரசிக்கின்றார்கள்.

சென்ற 1960 ஆம் வருடம் வெளியான மன்னாதி மன்னன் படம் சங்க கால இலக்கியத்தில் இடம் பெற்ற ஆதிமந்தி ஆட்டனத்தியின் காதல் கதை சாயலில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் எம்ஜிஆர், பத்மினி, அஞ்சலி தேவி உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். சென்ற 1981 ஆம் வருடம் வெளியான திரைப்படம் தண்ணீர் தண்ணீர். இத்திரைப்படம் தண்ணீரின் அவசியத்தை ஆணித்தனமாக பதிவு செய்த திரைப்படம் ஆகும். இந்த படம் நூறு நாட்கள் ஓடி பிலிம் பேர் விருது மற்றும் தேசிய விருதுகளை வென்றது.

1993 ஆம் வருடம் இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான திரைப்படம் கிழக்கு சீமையிலே. இத்திரைப்படத்தில் விஜயகுமாரும் ராதிகாவும் அண்ணன் தங்கையாக வாழ்ந்திருப்பார்கள். இந்த படத்தில் ஒரு பெண் தன்னுடைய அண்ணனுக்கும் கணவருக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் தவிப்பை ராதிகா மிக அழகாக வெளிப்படுத்தியிருப்பார். தமிழ் சினிமா உலகில் அண்ணன் தங்கை பாசத்திற்கு பாசமலர் திரைப்படத்திற்கு பிறகு கிழக்கு சீமையிலே திரைப்படம் தான் நிலை நிறுத்தியது.

Categories

Tech |