நாடு முழுவதும் வரும் அக்டோபர் 24 ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் தீபாவளி முன்னிட்டு அரசு அலுவலகங்கள் பலவற்றில் அதிகாரிகள் அதிகமாக லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு புகார் வந்துள்ளது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அரசு அலுவலகங்கள், சோதனை சாவடிகள் என அனைத்து பகுதிகளிலும் லஞ்ச ஒழிப்பு துறையினர் நேற்று மாலை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த அதிரடி சோதனையில் தமிழகம் முழுவதும் 16 துறைகள் சார்ந்த 46 அரசு அலுவலகங்களில் கணக்கில் வராத ரூ.2 கோடி தீபாவளி பரிசு பணம் கிடைத்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. இந்த சோதனை மேலும் பல அரசு அலுவலகங்களிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.