தீபாவளி என்பதன் பொருள்:
நாடு முழுவதும் இந்துக்களால் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகை தீபாவளி. தீபாவளி என்பதற்கு தீபங்களின் வரிசை என்று பொருள்.
தீபாவளி கொண்டாடப்படும் வழிமுறைகள்:
தீபாவளியன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மகாலெட்சுமி வாசம் செய்யும் நல்லெண்ணெய் வைத்து சீயக்காய் தேய்த்து கங்காதேவி எழுந்தருளும் சுடுதண்ணீரில் குளிக்க வேண்டும். மேலும் சுடுதண்ணீரில் குளிப்பதனால் நம்முடைய பாவங்கள் நீங்கி புண்ணியம் நம்மை வந்து சேரும். தீபாவளியன்று அகல் விளக்கு ஏற்றி புத்தாடை, இனிப்பு, பட்டாசு அனைத்தையும் வைத்து கடவுளை வணங்க வேண்டும். அதன்பின் அனைவரும் வீட்டில் உள்ள பெரியவர்களிடம் ஆசி பெற வேண்டும்.
மேலும் தீபாவளி நாளன்று வீட்டில் வசதி இல்லாதவர்கள், வீட்டிற்கு வருபவர்கள் யாருக்காவது புத்தாடை, பட்டாசு, இனிப்பு வாங்கிக் கொடுத்து அவர்களை சந்தோஷமாக தீபாவளியை கொண்டாட செய்யலாம். இதனால் நம்முடைய தலைமுறையில் இருக்கும் மற்றவர்களுக்கு பகிர்ந்து வாழ வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்த முடியும்.