பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் வெளியூர்களை சேர்ந்த லட்சக்கணக்கான தங்கி வேலையை பார்த்து வருகின்றனர். இவர்கள் ஆண்டுதோறும் பண்டிகைகளை முன்னிட்டு தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் அடுத்த மாதம் 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகை வருகிறது . இதனால் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல பேருந்துகளில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய தொடங்கியுள்ளனர்.
இதனால் ஆம்னி பேருந்துகளில் வழக்கமான கட்டணத்தை விட மூன்று மடங்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் சென்னையில் இருந்து மதுரை செல்வதற்கு 3 ஆயிரம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இரண்டு முதல் மூன்று மடங்கு கட்டணம் உயர்ந்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.